• Jan 19 2025

பிக் பாஸ் வீட்டில் 'லிட்டில் பிரின்சஸ்' செய்த அலப்பறைகள்..! இதுக்கு தான் பூர்ணிமாவுக்கு ஜால்ரா அடிச்சாங்களா?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் 84 நாட்களை வெற்றிகரமாக கடந்து ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், அர்ச்சனா வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள் நுழைந்தாலும், கொஞ்ச நாட்களுக்குள்ளயே தனக்கான கருத்துக்களை பயமில்லாமல் முன்வைத்து தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் அர்ச்சனா தான் லிட்டில் பிரின்ஸஸ் போல நடப்பதாக, மாயா கிண்டல் செய்துள்ளார்.


அதன்படி, பூர்ணிமா ,மாயா ,நிக்சன் , ரவீனா ஆகியோர் கூட்டமாக இருந்து கதைத்து கொண்டிருக்கும் போது, மாயா இவ்வாறு சொல்லுகிறார்.

அதாவது, பிக் பாஸ் வீட்டுல ஒரு லிட்டில் பிரின்ஸஸ் இருக்காங்க.. அவங்களுக்கு பாண்ல ஜாம் பூசி சாப்பிட எல்லாம் ரெடி பண்ணி வைக்கனும். டி போட்டு கொடுக்க ஒருவர் வேணும் .அவங்க வேலைய அவங்க செய்ய முடியாது .நாங்க தான் செய்து கொடுக்கணும் என்று லிட்டில் பிரின்ஸஸ் அர்ச்சனா மாதிரி மாயா நடித்து  காட்டினார் . இவ்வாறு  பயங்கரமாக அர்ச்சனாவை  மாயா நகைச்சுவை செய்துள்ளார் .


இதன்போது, ரவீனாவும், அர்ச்சனா என்னைய கொஞ்ச கூப்பிடுவாங்க.. ஆனா அவங்க வந்து கொஞ்ச மாட்டாங்க.. என்னைய தான் கூப்பிடுவாங்க நான் தான் போகனும் .என்னைய கூப்பிட்டு வேலை எல்லாம் சொல்லுவாங்க எனக்கு கடுப்பாகுது என்றும் இப்பிடி எல்லோரும் கதைத்து கொண்டு இருக்கும் போது சொல்லி அர்ச்சனாவை கிண்டல் செய்கின்றனர்.


அத்துடன், பூர்ணிமாவிடம் டீ போட்டுத் தருமாறும், சாப்பாடு செய்து தருமாறும் அர்ச்சனா போல நடித்தும் காட்டியுள்ளார் மாயா. தற்போது குறித்த வீடியோ பரவலாகியுள்ளது.


Advertisement

Advertisement