அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ,அனுபமா நடிப்பில் 21 ஆம் திகதி வெளியவுள்ள டிராகன் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. இவர் நடிப்பில் வெளியாகிய "லவ் டுடே " படத்தின் வெற்றியின் பின் ரசிகர்கள் பலரை தன்வசமாக்கினார்.
இப் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் அதிகம் ஈடுபடாமல் இருக்கும் படக்குழு இப் படத்தின் டீசர் ப்ரோமோக்களை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இதற்கான பார்வையாளர்களின் வரவேற்பும் அதிகம் இருந்தது. மற்றும் இந்த படத்திற்கு சிம்புவும் ஒரு பாடலினை பாடியுள்ளார்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் BTS வீடியோ ஒன்றினை பிரதீப் தனது x தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில் இவர் " எப்பயாவ பங் அடிச்சா தப்பில்ல நாளைக்கு தியேட்டர்ல பார்ப்போம் " என குறிப்பிட்டுள்ளார். இப் படத்தின் இயக்குநரும் பிரதீப்பும் சிறந்த நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இருவரது கூட்டணியும் நன்றாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Yepayava bunk adicha thappila…
Naliku theatre la paapom :)#Dragon#ReturnOfTheDragon pic.twitter.com/OI0qbozEGp
Listen News!