‘பைசன் காளமாடன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம் தான் ‘மஞ்சணத்தி’. தனது தனித்துவமான கதைக்களம் மற்றும் சமூகத்தை மையப்படுத்திய படைப்புகளின் மூலம் கவனம் பெற்றுள்ள மாரி செல்வராஜின் அடுத்த படைப்பாக உருவாகும் இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
‘மஞ்சணத்தி’ படத்தில் கதையின் முக்கிய கதாபாத்திரங்களில் கதிர், பிரியங்கா மோகன் மற்றும் கயாடு லோஹர் ஆகியோர் நடிக்கின்றனர். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் நடிகர்களின் கதாபாத்திரங்கள் குறித்த தகவல்கள் தற்போது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. இதனால் படத்தின் கதை மற்றும் கதாபாத்திரங்கள் தொடர்பான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

மேலும், இப்படத்திற்கு ‘இசைஞானி’ இளையராஜா இசையமைக்கிறார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் இளையராஜா இணைந்திருப்பது படத்தின் மீதான கவனத்தை மேலும் அதிகரித்துள்ளது. படத்திற்கு எழில் அரசு.கே ஒளிப்பதிவு செய்கிறார். செல்வா.ஆர்.கே படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.
இந்நிலையில், ‘மஞ்சணத்தி’ படத்தின் படப்பிடிப்பு இன்று, செப்டம்பர் 7-ஆம் தேதி, பூஜையுடன் அதிகாரபூர்வமாக தொடங்கியுள்ளது. படப்பிடிப்பு தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து அடுத்தடுத்த அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இன்று முதல் மஞ்சணத்தியின் தினங்களை தொடங்கிவைத்த எங்கள் இசைஞானிக்கு என்றைக்குமான எங்கள் நன்றியும் அன்பும்!! #Manjanathi 🌳💛#Shootbeginstoday @ilaiyaraaja @navvistudios @divyamari @SkandaPictures @Ezhil_DOP @ramu_thangaraj @Editorselva @Kathir @priyankaamohan @11Lohar… pic.twitter.com/1z8EWtO7Fi
Listen News!