• Jan 19 2025

'குணா’ நாயகிக்கு லவ் டார்ச்சர் கொடுத்தாரா கமல்ஹாசன்? எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லையாம்..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

மலையாளத்தில் வெளியான ’மஞ்சும்மள் பாய்ஸ்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் 'குணா’ திரைப்படம் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது என்பதும் குறிப்பாக ’கண்மணி அன்போடு காதலன்’ என்ற பாடல் ’மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல’ என்ற வசனம் ஆகியவை சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் 'குணா’ திரைப்படம் கடந்த 1991 ஆம் ஆண்டு தீபாவளி அன்று ரிலீஸ் ஆன போது தான் ரஜினியின் 'தளபதி’படமும்  ரிலீஸ் ஆனது என்பதும் இரண்டு படங்களுக்கும் சரியான போட்டி இருந்தும் ’தளபதி’ படம் தான் வசூல் அளவில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில் 'குணா’ படத்தின் நாயகி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தின் நாயகி ரோஷினி, ஜோதிகாவின் சகோதரி என்று ஒரு சிலர் தவறாக சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருகின்றனர். ஆனால் உண்மையில் இவர் ஒரு அறிமுக நடிகை தான்.

இந்த படத்தின் படப்பிடிப்பின்போது கமல் அவருக்கு லவ் டார்ச்சர் கொடுத்ததாகவும் இதனை அடுத்து இந்த படத்தை முடித்துவிட்டு அவர் சினிமாவை விட்டு ஓடி போய் விட்டதாகவும் கூறப்படுகிறது. அதன் பிறகு பல வருடங்கள் ஆகியும் அவர் எங்கே இருக்கிறார்? எப்படி இருக்கிறார்? என்பது கூட திரை உலகினர்களுக்கு கூட தெரியாது என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த தகவலை பத்திரிகையாளர் ஒருவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு பக்கம் 'குணா’ திரைப்படம் குறித்த பாசிட்டிவ் கருத்துக்கள் பரவி வரும் நிலையில் இந்த படத்தின் நாயகி குறித்த சர்ச்சைக்குரிய கருத்தும் இன்னொரு பக்கம் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement