பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் 92 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த வாரம் இறுதியாக ஆறு போட்டியாளர்கள் தான் எஞ்சி காணப்படுகின்றார்கள்.
கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் இருந்து பார்வதிக்கும் கமருதீனுக்கும் ரெட் கார்ட் கொடுத்து அனுப்பப்பட்ட நிலையில், சுபிக்ஷா எலிமினேட் ஆகி வெளியேறி இருந்தார். அதன் பின்பு பணப்பட்டி 2.0 டாஸ்க் தொடங்கப்பட்டது.
மேலும் பிக் பாஸ் இல்லத்தில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார் வியானா. இதன் போது அவர் ஹவுஸ்மேட்சுக்கு பல விடயங்களை கூறியதோடு விக்ரமுக்கும் அட்வைஸ் பண்ணி இருந்தார்.

இந்த நிலையில், இன்றைய தினம் வெளியான ப்ரோமோவில் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் என்ட்ரி கொடுத்துள்ளார். அவர் ஹவுஸ்மேட்ஸ் உடன் பேசிக்கொண்டு இருக்கும்போது, எல்லா சீசனையும் விட இந்த சீசனில் லைவ் அதிகமாக பார்த்து இருக்காங்க.. வாட்டர் மெலன் உள்ள இருந்ததுனால நல்லா இருந்துச்சுன்னு சொன்னாங்க..
எல்லா ப்ரோமோலயும் நான் வந்து இருக்கேன். என்று திவாகர் சொல்ல, வெளி உலக விஷயங்களை இங்கே பேசாதீங்க.. அதையும் மீறி பேசுவேன் என்று சொன்னீங்கன்னா மெயின் டோர் வழியா வெளியே போங்கன்னு சொல்லிடுவேன் என்று பிக் பாஸ் அறிவுறுத்தி உள்ளார்.
Listen News!