• Jan 19 2025

நடுவர்கள், தயாரிப்பாளர்களை அடுத்து இயக்குனரும் வெளியேற்றம்.. குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு மூடுவிழாவா?

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்குக் வித் கோமாளிஎன்ற நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் ஏற்கனவே நான்கு சீசன்கள் முடிவடைந்ததால் ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக முதலில் இந்த நிகழ்ச்சியின் நடுவர்கள் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு ஆகிய இருவரும் விலகுவதாக அறிவித்தனர்.

இதனை அடுத்து இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளரான ரவூஃபாவும் விலகுவதாக தனது சமூக வலைதளத்தில் அறிவித்தார். இந்த நிலையில் தற்போது அடுத்த கட்டமாக இந்த நிகழ்ச்சியின் இயக்குனரான பார்த்திபன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்குக் வித் கோமாளிநிகழ்ச்சியில் இருந்து வருத்தத்துடன் வெளியேறுகிறேன் என்று தெரிவித்துள்ளதை அடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு மூடு விழா ஏற்பட்டு விட்டதாக ரசிகர்கள் சோகத்துடன் தெரிவித்து வருகின்றனர்.



குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இயக்குனர் பார்த்திபன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்இந்த நிகழ்ச்சிக்கு குட் பை சொல்வது எனக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது, ஆனால் அதே நேரத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மகிழ்ச்சியான நினைவுகளுடன் வெளியேறுகிறேன். இது எங்களுக்கு வெறும் நிகழ்ச்சி அல்ல, நாங்கள் அனைவரும் கடந்த நான்கு சீசன்களில் ஒரு குடும்பமாக தான் பயணம் செய்தோம், இந்த நினைவுகள் அனைத்தும் என் நெஞ்சில் எப்போதும் மறக்காமல் இருக்கும்.

உங்கள் அனைவரின் அன்புக்கும் ஆசீர்வாதத்திற்கும் மிகவும் நன்றி, எப்போதும் நான் உங்களுக்கு நன்றி உடையவனாக இருப்பேன், ஆதரவளித்த அனைவருக்கும் நன்றிஎன்று கூறியுள்ளார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தயாரிப்பாளர், இயக்குனர், நடுவர்கள் ஆகியோர் விலகி விட்டதை அடுத்து இந்த நிகழ்ச்சி இனியும் தொடர வாய்ப்பே இல்லை என்று தான் கூறப்பட்டு வருகிறது.



Advertisement

Advertisement