• Jan 19 2025

கலையரசன் சரியான பெண்பிடி கள்ளன்.. வீடியோ ஆதாரம் சிக்கிருக்கு! இன்ஸ்டா பிரபலம் புகார்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

சில வருடங்களுக்கு முன்பு டிக் டாக், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வீடியோக்கள் வெளியிட்டு பிரபலமாக காணப்பட்டவர் தான் கலையரசன். இவரும் இவருடைய மனைவியும் டிக் டாக் பிரபலங்களாக காணப்பட்டார்கள். அதன்பின்பு கலையரசன் அகோரியாக மாறி பல சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தார்.

மேலும் விஜயகாந்தின் மரணம் மட்டுமில்லாமல் சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலில் உயிரிழந்த மாரிமுத்துவின் மரணம் மற்றும் தனது கண் முன் யார் வந்து நின்றாலும் அவர்களுடைய மரணத்தையும் கணித்து விடுவேன் என்று பலருக்கும் அச்சத்தை கொடுத்திருந்தார்.

d_i_a

இதைத்தொடர்ந்து கலையரசன் பற்றி பல விமர்சனங்கள் எழுந்தது. பலரும் அவர் பொய் சாமியார் என்றும் அவரது ஜடை கூட ஒரிஜினல் இல்லை என்றும் பலவாறு பேட்டி கொடுத்தார்கள். ஆனால் கலையரசனும் அவரது மனைவியும் பேட்டி கொடுத்தவர்களுக்கு எதிராகவே பல ஆதாரங்களை முன்வைத்து பேசியிருந்தார்கள்.


இந்த நிலையில், தற்போது இன்ஸ்டா பிரபலமான அகோரி கலையரசனின் மனைவி அவருக்கு எதிராக புகார் கொடுத்துள்ளார். அதன்படி கலையரசன் தற்போது தன்னை விட்டு ஓடி விட்டதாகவும், தான் அவர் விட்ட பிழைகளை தட்டிக் கேட்டதால் தன்னுடன் இருக்கவில்லை என்றும் அவருக்கு எதிராக நிறைய பெண்களின் வீடியோக்கள் தன்னிடம் ஆதாரமாக உள்ளது எனவும், அவர் பிச்சைக்காரியை கூட விட்டு வைக்க மாட்டார் அந்த அளவுக்கு மோசமானவர். கலையரசனை எங்கு பார்த்தாலும் பிடித்துக் கொடுக்கவும் என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அவர் வெளியிட்ட வீடியோ படு வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement