• Jan 18 2025

நந்தன்- என்ன கட்ஸ் சார் அது! இயக்குனரை பாராட்டிய ரஜினிகாந்த்!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கூலி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். தற்போது இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இப்படத்திற்கு பிறகு ரஜினி அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்.


லைக்காவின் தயாரிப்பில் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் ரஜினி ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக பேசப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ரஜினிகாந்த் சமீபத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான நந்தன் படத்தை பார்த்து பாராட்டியிருக்கிறார். 


d_i_a

அதில்  “டைரக்டர் சார நான் ரஜினிகாந்த் பேசுறேன். உங்க ‘நந்தன்’ படம் பார்த்தேன். கையைப் பிடித்து அழைத்துக் கொண்டுபோய்க் காட்ட நான் தயார்னு சொல்லி இருக்கீங்க. என்ன கட்ஸ் சார்” எனப் பேசத் தொடங்கியவர், படபட வேகத்தில் படத்தின் மொத்த விஷயங்களையும் பாராட்டித் தள்ளினார். சசிகுமார் ,சமுத்திரக்கனி மற்றும் பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட அத்தனை போரையும் பாராட்டினார் என இயக்குனர் கூறியுள்ளார். 



Advertisement

Advertisement