தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் காலம் கடந்தும் அழகு ராணியாக திகழ்பவர் காஜல் அகர்வால். திரையுலகில் தனது தனித்துவமான நடிப்பு , இயற்கையான அழகு மற்றும் ஸ்டைல் மூலம் தனக்கென ஓர் அடையாளத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளார்.
குறிப்பாக, 2022ம் ஆண்டு தனது மகனை பெற்ற பிறகு சில மாதங்கள் திரையுலகில் இருந்து விலகியிருந்த காஜல் அதன்போது தாய்மையின் புதிய வாழ்க்கையை அனுபவித்தார். அந்தவேளையில் காஜல் தனது நேரத்தை அதிகளவாக குடும்பத்தோடு செலவழித்திருந்தார்.
தற்போது ஒரு குழந்தையின் தாயாக மாறிய பின்னும், அவரின் அழகு மற்றும் கவர்ச்சி எல்லாமே ஜொலிக்கின்றது என்பதற்கான ஆதாரமாக தற்பொழுது இன்ஸ்டாவில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் காஜல் மிகவும் அழகாகவும், ஸ்டைலாகவும் காணப்பட்டார். இதனைப் பார்த்த ரசிகர்கள் " அழகு தேவதை போல் ஜொலிக்கிறீங்களே...!" என்று கமெண்ட் மழையைப் பொழிந்து வருகின்றனர். இந்தக் கமெண்டுகளே அவரது பிரபலத்தையும், ரசிகர்கள் மனதில் அவர் எவ்வளவு முக்கியமானவராக இருக்கிறார் என்பதையும் நிரூபிக்கிறது
Listen News!