• Mar 26 2025

மீண்டும் ஒரு மகுடம் சூடிய அஜித்..! கார் பந்தயத்தில் வேற லெவெல் வெற்றி..!

subiththira / 2 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் ஸ்டார் அஜித் குமார் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்திருந்தார். அத்தகைய நடிகர் திரைக்கதையில் புதிய பரிமாணத்தைக் கொண்டு வருவதைப் போல கார் பந்தயத்திலும் அதிகளவான வெற்றியைப் பெற்றுள்ளார்.



சமீபத்தில் இத்தாலியில் நடைபெற்ற 12வது மிச்செலின் முகெல்லோ கார் பந்தயத் தொடரில், அஜித் குமார் தனது AK Racing அணியுடன் கலந்து கொண்டு மிகப் பெரிய வெற்றியை கைப்பற்றியுள்ளார். உலகின் முன்னணி ரேசிங் பந்தயங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த நிகழ்வில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வருட தொடக்கத்தில், துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில், அவரது அணி மூன்றாவது இடம் பிடித்ததற்கான வெற்றி இன்னும் ரசிகர்கள் மனதில் நிலைத்துள்ளது. அதன் தொடர்ச்சியாகவே, இத்தாலியின் மிகச் சிறந்த பந்தயமாக கருதப்படும் மிச்செலின் முகெல்லோ போட்டியில் கலந்துகொண்டு வென்றிருக்கின்றார். அஜித் குமார் ரேஸில் பங்கேற்றிய புகைப்படங்கள் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. இதனைப் பார்த்த ரசிகர்கள் அஜித் ஒரு ரேஸிங் ஹீரோ என்று கூறிவருகின்றனர்.






Advertisement

Advertisement