• Dec 03 2024

ஜோவிகா இன்னும் எலிமினேட் ஆகல.. அவ பிக்பாஸ் ரகசிய அறையில இருக்கா..! ரசிகர்களை லைவில் குழப்பிய வனிதா

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் இப்போது 10வது வாரம் நடந்து கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 62 நாட்களை முடித்து இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. 

இதற்கு முன்னால் நடந்த சீசன்களில் இருந்தது போல கட்டினமான டாஸ்குகளும் கான்ட்ரோவர்சிகளும் இந்த சீசனில் கொஞ்சம் குறைவாக தான் இருக்கிறது.

இந்த சீசன் பொருத்தவரையில் எதிர்பார்க்காத பல விஷயங்கள் நடந்திருக்கிறது. ரெட் கார்டு தொடங்கி வைல்ட் கார்டு வரை இப்போது மீண்டும் பூகம்பமாக வந்துள்ள வைல்ட் கார்ட் என்ட்ரி என அனைத்துமே எதிர்பார்க்காத ஒன்றுதான்.


இவ்வாறு 62 நாட்கள் நிறைவடைந்திருக்கும் பிக் பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராகக் கலந்து கொண்டிருப்பவர் தான் நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா. ஆரம்பத்தில் இவருக்கு ரசிகர்களின் ஆதரவு காணப்பட்டாலும், நாளடைவில் அது குறைந்தே விட்டது.

இதை தொடர்ந்து, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து விக்ரம் மற்றும் ஜோவிகா வெளியேறியுள்ளதாக அதிகார்வப்பூர்வமான அறிவிப்பு இணையத்தில் வெளியானது. 

இந்த நிலையில், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரும், நடிகையும், ஜோவிகாவின் தாயுமான வனிதா இதனை மறுத்து, லைவ் ஒன்றில் சில தகவல்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதன்படி அவர் மேலும் கூறுகையில், 


'ஜோவிகா இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறவில்லை. அவள் வெளியே வந்திருந்தா எனக்கு தான் போன் பண்ணி இருப்பாங்க.  நான் இப்போ கோவால இருக்கன். ஆனா எனக்கு இதுவரைக்கும் ஒரு போன் காலும் வரவில்லை. அப்படி ஜோவிகா வெளிய வந்து இருந்தா, இன்று நான் ஜோவிகாவ கூப்பிட அங்கே தான் போய் இருப்பேனே தவிர இப்படி லைவில் வந்து உட்கார்ந்து பேசிட்டு இருக்க மாட்டன்.

இந்த விஷங்கள் பற்றி உங்கள்ட மறைக்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்ல. என்ட வாழ்க்கைய திறந்த புத்தகமாக தான் வச்சு இருக்கன். அதனால நான் எதையும் மறைக்க வேண்டிய அவசியம் இல்ல. ஜோவிகா வெளியே வந்திருந்தால் ஆமாம் என்று அதை நான் சொல்லியிருப்பேனே..' என்று சொல்லி இருந்தார். 


இவ்வாறான நிலையில், அப்போ ஜோவிகா எங்கே தான் போனார் என்ற கேள்வி எழ, ஒருவேளை அவங்க பிக் பாஸ் வீட்டுல உள்ள ரகசிய அறையில வச்சு இருப்பாங்களோ? என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர். எனினும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ன நடந்தது என்பதை இன்று இரவு பார்ப்போம்.


 


Advertisement

Advertisement