• Sep 13 2024

AK 63-ல் அஜித்தின் கெட்டப் இது தானா? தலைக்கு பாடி லாங்குவேஜ் ஒர்க் அவுட் ஆகுமா? லீக்கான சீக்ரெட்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரையுலகில் முன்னணி ஹீரோவாக திகழும் அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா மற்றும் பிரியா பவானி ஷங்கர் என பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். அத்துடன் விடாமுயற்சி படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் பேசப்படுகிறது.

இதைத்தொடர்ந்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார் அஜித். இந்த படம் அஜித்திற்கு 63வது படமாகும். இந்த படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி உள்ளன.


இந்த நிலையில், 'குட் பேட் அக்லி' படத்தில் நடிக்கும் அஜித், தனது மூன்று கேரக்டரிலும் பாடி லாங்குவேஜ் மாற்றி நடிக்கப் போவதாகவும், அதில் மொட்டைத்  தலையுடன் ஒரு வில்லத்தனமான கதாபாத்திரம் அஜித்திற்கு உள்ளதாகவும் ரகசிய தகவலொன்று கசிந்துள்ளது.


எனவே அடுத்த வருட பொங்கலுக்கு தல ரசிகர்களுக்கு தரமான சம்பவம் இருக்கு என்பதோடு, குட் பேட் அக்லி படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, மைத்ரி மூவி மேக்கர்ஸ், தேவிஸ்ரீ பிரசாத் என டோலிவுட் கூட்டணியுடன் ஏகே 63 படத்தில் இணைந்துள்ளார் அஜித். சூர்யாவின் கங்குவா, விஷாலின் ரத்னம் ஆகிய படங்களுக்கு இசையமைத்து வரும் தேவிஸ்ரீ பிரசாத், இப்போது அஜித்துடனும் இணைந்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement