• Jan 18 2025

நயன்தாராவுக்கு தலைக்கனம் அதிகரிக்க காரணம் தமிழ் மக்கள் கொடுத்த பில்டப் தானா? பிஸ்மி பகிர்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தனதாக்கி கொண்டவர் தான் நடிகை நயன்தாரா. இவர் மலையாள நடிகையாக இருந்த போதும் தமிழில் இவருக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இதனால் தொடர்ந்தும் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக நடித்து வருகின்றார்.

நயன்தாரா பிரபல நடிகையாக காணப்பட்ட போதும் பல சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டார். ஆரம்பத்தில் இவர் சிம்பு, பிரபு தேவாவை காதலித்து பிறகு அவர்களுடன் உண்டான உறவை முறித்துக் கொண்டார். பிறகு சிங்கிளாக இருந்த நயன்தாரா நானும் ரவுடிதான் படத்தில் நடிக்கும் போது அதன் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்தார்.

கிட்டத்தட்ட 06 ஆண்டுகள் காதலித்து வந்த இவர்கள் 2022 ஆம் ஆண்டு பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார்கள். அதன் பின்பு வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாயானார் நயன்தாரா. 

d_i_a

சமீபத்தில் தமது திருமண ஆவண படத்தை வெளியிடுவதற்கு தனுஷ் சிக்கலாக காணப்படுகிறார் என்று அவர் மீது மிகப்பெரிய குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். நயன்தாரா வைத்த குற்றச்சாட்டுக்கு பல நடிகைகளும் ஆதரவு தெரிவித்தார்கள். தற்போது தனுஷ் நயன்தாரா மீதும் விக்னேஷ் சிவன் மீது வழக்கு தாக்கல் செய்துள்ளார்.


இந்த நிலையில், பிரபல பத்திரிகையாளரும் சினிமா விமர்சகருமான பிஸ்மி நயன்தாரா பற்றி புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி அவர் கூறுகையில், தமிழ் சினிமாவில் நயன்தாராவுக்கு இடம் கிடைத்த அந்த கணத்திலிருந்து அவர் கால்கள் தரையில் இல்லை. அதற்கு முன்பு அவர் தரையில் நடந்ததை நாம் பார்த்திருப்போம். ஆனால் புகழின் உச்சிக்கு சென்ற பிறகு அவர் தரையில் நடக்கவில்லை. வானத்தில் தான் குதித்து வருகின்றார்.

லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டமும் மக்களால் அவருக்கு வழங்கப்படவில்லை. அவர்களாகவே தங்களுக்கு பட்டத்தை சூட்டிக்கொண்டதோடு, தமிழ் மக்களால் கொடுக்கப்பட்ட பில்டப்பும் இணையவாசிகளால் கொடுக்கப்பட்ட பில்டப் தான் நயன்தாரா என்று இந்த நிலையில் இருக்க காரணமாக காணப்படுகின்றது.

இதன் காரணத்தினால் தான் நயன்தாரா தனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்களையே மதிக்காமல் அவர்களுக்கு  எதிராக செயல்படுகின்றார் என பிஸ்மி குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement