நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் உருவான ஜெயிலர் திரைப்படம் அனிருத் இசையில் வெளியாகி தாறுமாறான வரவேற்பை பெற்று 650 கோடியை வசூலித்தது. அதன் பிறகு வந்த படங்கள் எதுவும் இந்த வசூலை நெருங்கவில்லை.

அதை அடுத்து சூப்பர் ஸ்டார் நடிப்பில் லால் சலாம், வேட்டையன் ஆகிய படங்கள் வெளிவந்தது. அது ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தினை பெற்றது. தற்போது ரஜனிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார்.

இதை அடுத்து ஜெயிலர் 2 படத்தில் அவர் நடிக்க இருக்கிறார். ஸ்கிரிப்ட் வேலைகளில் பிஸியாக இருந்த நெல்சன் தற்போது அடுத்த கட்ட வேலைக்கு தயாராகி விட்டார். அதன்படி இதன் ப்ரோமோ சூட்டிங் வேலைகளில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
"d_i_a

அதாவது வரும் டிசம்பர் 5ஆம் தேதி இந்த ஷூட்டிங் நடைபெறும் என தகவல்கள் கசிந்துள்ளது. அதேபோல் தலைவரின் பிறந்த நாளான டிசம்பர் 12 அன்று அந்த வீடியோ வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Listen News!