பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், கோபியை பார்ப்பதற்காக ராதிகா பாக்யா வீட்டுக்கு வருகின்றார். அங்கு மையூவுக்கு பர்த்டே. நாளைக்கு வர முடியுமா? என்று கேட்கின்றார். இதன் போது கோபி நாளைக்கு இனியாவுக்கு டான்ஸ் காம்படிஷன் இருக்குது.. அங்க போகணும் மையூவை பார்க்க ஈவினிங் வருகின்றேன் என்று சொல்லுகின்றார்.
ஆனாலும் ராதிகா டான்ஸ் கம்பெட்டிஷன் கட்டாயம் போக வேண்டுமா? அங்கு சவுண்ட் சிஸ்டம் அதிகமாக இருக்கும். எதற்கும் டாக்டரிடம் கேளுங்கள் என்று சொல்ல, அங்கிருந்த இனியாவும் ஈஸ்வரியும் அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லுகின்றார்கள்.
இதனால் ராதிகா வெளியே கிளம்பி வர, இனியா அவரிடம் வந்து உங்களை பார்க்கவே பயமாக இருக்கின்றது.. நீங்க எங்க அப்பாவை பிரிச்சு கூட்டிக்கொண்டு போயிடுவீங்க.. எங்க குடும்பம் இப்பதான் சந்தோஷமாக இருக்கிறது.. அதனால் நீங்கள் அப்பாவை டிவோஸ் பண்ணிடுங்க என்று சொல்லுகின்றார்.
இதை தொடர்ந்து ராதிகா வீட்டுக்குச் சென்று நடந்தவற்றையெல்லாம் கமலாவிடம் சொல்லிவிட்டு வீட்டை காலி பண்ணுவதாக வீட்டு ஓனருக்கு கால் பண்ணி சொல்லுகின்றார். வீட்டு ஓனர் கதைத்து முடிப்பதற்கு முன்பே அவர் வீட்டை காலி பண்ணுவதாக சொல்லிவிட்டு போனை வைத்து விடுகின்றார்.
இதனால் வீட்டில் ஓனர் கோபிக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்ல, அவர் ராதிகாவுடன் கதைத்து விட்டு எடுப்பதாக சொல்கின்றார். அதன் பின்பு ராதிகாவை மீண்டும் வீட்டுக்கு வருமாறு அழைக்கின்றார்.
ராதிகா முதலில் மறுத்தாலும் பின்பு செல்கின்றார். இதன் போது எதற்காக இப்படி முடிவு எடுத்தா? நாம ரெண்டு பேரும் வாழத்தானே அந்த வீடு எடுத்தோம் என்று கோபி சொல்ல, தான் வீட்டை காலி பண்ணி விட்டு போவதாக ராதிகா சொல்லுகிறார்.. இதன்போது ஈஸ்வரி அவ போனா போகட்டும் என்று எல்லோர் முன்னிலையிலும் சொல்லுகின்றார் இதுதான் இன்றைய நாளுக்கான எபிசோட்.
Listen News!