• Jan 18 2025

கெட்டப்பில் மிரட்டும் எஸ்.ஜே.சூர்யா ,வெளியான "இந்தியன் - 2" படப்பிடிப்பு தள புகைப்படம் !

Thisnugan / 6 months ago

Advertisement

Listen News!


பெரும் பொருட்ச்செலவில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் மற்றும் உலக நாயகன் கூட்டணியில் உருவான "இந்தியன் -2" திரைப்படம் வருகிற 12 ஆம் திகதி உலகெங்கும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் நாளுக்கு நாள் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

INDIAN 2 - Official Trailer | Kamal ...

இந்தியன் பாகம் ஒன்றில் இலஞ்சம் என்ற ஒரு சொல்லே வில்லனாக கொண்டு திரைக்கதை வடிவமைக்கப்பட்டது. ஆனால் "இந்தியன் -2" வில் ஊழலுக்கும் இலஞ்சத்திற்கும் ஒரு முகத்தை கொடுக்க நினைத்த சங்கர் படத்தின் வில்லன் பாத்திரமாக எஸ்.ஜே.சூர்யாவை தேர்ந்தெடுத்திருக்கிறார்.


இந்நிலையில் அண்மையில்  "இந்தியன் -2" படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட எஸ்.ஜே.சூர்யாவின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.வெள்ளி நிறத்தில் நகைகள் கோர்த்த கோட் சூட்டுடன் காட்சியளிக்கும் எஸ்.ஜே.சூர்யாவின் லுக் மிரட்டலாக இருக்கிறது.அத்தோடு ட்ரைலரில் உடல் முழுதும் தங்க நகைகளுடன் எஸ்.ஜே.சூர்யா வரும் சிறு வீடியோ கிளிப் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement