• Jan 19 2025

விமான நிலைய பணியாளர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்ட அஜித் - போட்டோ வைரல் !

Thisnugan / 6 months ago

Advertisement

Listen News!

அஜித் ரசிகர்கள்  காத்திருக்கும் "விடாமுயற்சி" படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் அஜர்பைஜானில் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் அண்மையில் படப்பிடிப்பு தள விடியோக்கள் வெளியாகி ரசிகர்களால் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வைரலானது.

Ajith Shocking Live Daredevil Stunt at Vidaamuyarchi Shooting Spot 😱 |  Ajith Kumar - YouTube

இந்நிலையில் நடிகர் அஜித் "விடாமுயற்சி" படத்தின் படப்பிடிப்பில் இருந்து சற்றுநாள் விலகி ஓய்விற்காக சென்னை திரும்பியுள்ளதாக அறியக்கூடியதாய் உள்ளது.இன்று காலை சென்னை விமான நிலையத்தை வந்தடைந்த அஜித் எதிர்பாரா அளவு ரசிகர்களால் சூழப்பட்டார்.


சென்னை விமான நிலையத்தில் விமான நிலைய பணியாளர்களின் வேண்டுகோளுக்காக அவர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்ட அஜித் அவர்களுக்கு எதிர்பாரா சந்தோசத்தை கொடுத்துள்ளார்.தற்போது அஜித்துடன் விமான நிலையத்தில் இருந்த ரசிகர்கள் எடுத்துக்கொண்ட புகைபடங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement