• Jan 19 2025

ரொமான்ஸ் பண்ண எனக்கு கூச்சமே இல்லை, அவர் எதுக்கு வெக்கப்பட்டார் என்று தெரில- பலநாள் ரகசியத்தை உடைத்த ஆண்ட்ரியா

stella / 1 year ago

Advertisement

Listen News!


பாடகியாக அறிமுகமான நடிகை ஆண்ட்ரியா அடுத்தடுத்து நடிகையாகவும் டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மேலும் மாடலிங், இசை கச்சேரிகளிலும் இவரை பிசியாக பார்க்க முடிகிறது. சமூக வலைதளங்களிலும் தன்னுடைய அடுத்தடுத்த அப்டேட்களை இவர் வெளிப்படுத்தி வருகிறார்.

 திரைத்துறையில் 15 ஆண்டுகளை கடந்து சிறப்பாக செயல்பட்டுவரும் ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் சரத்குமாரின் மனைவியாக தன்னுடைய என்ட்ரியை கொடுத்திருந்தார்.முதல் படத்திலேயே ஒரு சிறுவனின் அம்மாவாக நடித்துள்ள ஆண்ட்ரியா, தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.


 இறுதியாக ஆண்ட்ரியா நடிப்பில் அரண்மனை 3 படம் வெளியான நிலையில், அடுத்தடுத்து அனல் மேலே பனித்துளி, பிசாசு, கா, மல்லிகை, நோ என்ட்ரி, வட்டம் என ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இதில் மிஷ்கின் இயக்கத்தில் உருவான பிசாசு 2 திரைப்படத்தில் முதன்மைக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.


இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா அளித்திருக்கும் பேட்டி ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அவர் அளித்த பேட்டியில், "வடசென்னை படத்தில் நடித்தபோது ரொமான்ஸ் காட்சிகளில் நடிப்பதற்கு இயக்குநர் அமீர் கூச்சப்பட்டார். அப்போது, ஒரு பெண் நானே வெட்கப்படவில்லை. இவர் ஏன் வெட்கப்படுகிறார் என்றுதான் நினைத்தேன். ஆனால் அவர் லவ் சீன்களில் நடித்த அனுபவம் இல்லாததால் அப்படி இருந்திருக்கலாம். எனக்கு நிறைய அனுபவம் இருக்கிறது" என்றும் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement