• Apr 17 2026

நியூ இயர் கொண்டாட்டம் ஆரம்பம்- பாக்கியாவுடன் குத்தாட்டம் போடும் ராதிகா- கோபியை மறந்திட்டீங்களே- வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர்  பட்டாளமே காணப்படுகின்றது. கணவனைப் பிரிந்து வாழும் பெண் தன்னுடைய வாழ்க்கையில் எப்படியான பிரச்சினைகளை எதிர் கொள்கின்றாள் என்பதையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.

சீரியலின் கதைப்படி பாக்கியா தன்னுடைய பிஸ்னஸை தக்க வைத்துக் கொள்வதற்காக பாடுபட்டு வருகின்றார். இது ஒரு புறம் இருக்க செழியனுக்கு ஜெனி வீட்டிலிருந்து விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி விட்டதால் ஜெனியையும் செழியனையும் எப்படி சேர்த்து வைப்பது என்ற குழப்பத்தில் இருக்கின்றார்.


அத்தோடு எழிலின் மனைவி அமிர்தாவின் முதல் கணவன் மீண்டும் வந்து அமிர்தாவை தன்னுடன் அனுப்பி வைக்குமாறும் தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பதால்,பாக்கியா எழில் வாழ்க்கையை எப்படிக் காப்பாற்றுவது என்ற பிரச்சினையிலும் இருக்கின்றார்.

இந்த நிலையில்,பாக்கியாவும் ராதிகாவும் சேர்ந்து ரீல்ஸ் வீடியோ செய்துள்ளனர். இதனை ராதிகா தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் என்ன தான் உங்களுக்குள்ள பிரச்சினை இருந்தாலும் உங்கள் நட்பு இன்னும் அப்படியே தான் இருக்கு என்று கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement