• Feb 23 2025

திருமண அழைப்பிதழ் வைக்க மாட்டேன் .... .பட்டாசு சத்தமும் என் காதில் கேட்க கூடாது...'இந்தியன் 2' நடிகை திடீர் முடிவு ...

Kamsi / 1 year ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த வரும் ’இந்தியன் 2’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நடிகை ரகுல் பிரீத் சிங் . வரும் 21ஆம் திகதி  திருமணம் செய்ய இருக்கும் நிலையில் இந்த திருமணம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் பசுமை திருமணமாக நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். தற்போது கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் ’இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது நீண்ட நாள் காதலர் ஜாக்கி பக்தானி என்பவரை வரும் 21ஆம் தேதி கோவாவில் திருமணம் செய்ய உள்ளார்.


இந்த திருமணத்திற்கான கொண்டாட்டங்கள் ஏற்கனவே ஆரம்பித்து விட்ட நிலையில் தற்போது இந்த திருமணம் பசுமை திருமணமாக நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் திருமண ஏற்பாடுகளை ரகுல் ப்ரீத்தி சிங் நேரடியாக கவனித்து வருவதாகவும் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் இந்த திருமணம் நடைபெற இருப்பதாகவும் குறிப்பாக திருமண நிகழ்வில் பட்டாசு வெடிக்க கூடாது என்றும் திருமண அழைப்பிதழை பேப்பரில் அச்சடிக்காமல் டிஜிட்டல் முறையில் மட்டுமே அழைப்பிதழ் அளித்துள்ளதாகவும் தெரிகிறது.




Advertisement

Advertisement