நடிகராகும் கனவில் பல படங்களில் இருக்கும் பகுதிகளை நடித்து வைரலாகிய டாக்டர் திவாகர் பலராலும் water melon ஸ்டார் என அறியப்படும் இவர் பல ரோல்களிற்கும் ஆளாகி வருகின்றார். தன்னை ஒரு பெரிய நடிகனாக நினைத்து சுற்றி திரியும் இவர் சமீபத்தில் தன்னோடு சூரியை ஒப்பிட்டு பேசிய விடயம் நெட்டிசன்களால் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்த நடிகர் "நான் ஏற்கனவே பெரிய படிப்பு படிச்சி பெரிய தொழில்ல இருக்கேன். சூரிக்கு படிப்பு இல்ல, அதுனால பெயிண்ட் அடிக்கிற வேலை எல்லாம் செஞ்சி இந்த நிலைக்கு போய் இருக்கார். ஆனா, நான் இருக்க நிலைக்கும் திறமைக்கும் 500 ரூபாய்க்கும் 1000 ரூபாய்க்கு எல்லாம் நடிக்க முடியாது. என்னால கீழ இருந்து எல்லாம் வர முடியாது" என கூறியுள்ளார்.
இந்த பேட்டி தற்போது வைரலாகி வருவதுடன் சூரி ரசிகர்கள் பொங்கி எழுந்துள்ளனர். சூரியின் திரை வாழ்கை அனைவராலும் கொண்டாடப்படுவதுடன் இவரது பேச்சு தற்போது அனைவரையும் கோபமடைய வைத்துள்ளது.
Listen News!