தெலுங்கில் பிரபல நடிகரான நாக சைதன்யா நடிப்பில் தற்போது வெளியான திரைப்படம் தான் 'தண்டேல்'. இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தை சந்து மொன்டெட்டி என்பவர் இயக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசை அமைத்துள்ளார்.
இந்த நிலையில், மிகப்பெரிய எதிர்பார்ப்புகளோடு வெளியான 'தண்டேல்' திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தமது விமர்சனங்களை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றார்கள். அதன்படி ட்விட்டர் பக்கத்தில் வெளியான விமர்சனங்களை விரிவாக பார்ப்போம்.
நாக சைதன்யா தனது சினிமா துறையில் பெரிதாக ஹிட் படங்களை கொடுக்காவிட்டாலும் படுதோல்வியான படங்களையும் அவர் ரசிகர்களுக்கு கொடுக்கவில்லை. தனது கேரியரை மிகவும் நேர்த்தியாகவும் நிதானமாகவும் கொண்டு செல்லுகின்றார்.
அந்த வகையில் படத்தை பார்த்த ரசிகர்கள் சாய் பல்லவியின் நடிப்பை வெகுவாக பாராட்டி உள்ளனர். முதல் பாதையில் அருமை என்றும் சாய்பல்லவி, நாக சைதன்யா இணைத்து ஆடிய நடனம் சும்மா தெறிக்கவிட்டதாகவும் தெரிவித்து உள்ளனர்.
இன்னொருவர் நாக சைதன்யாவின் நடிப்பு அருமையாக இருந்தது. இது அவருக்கு ப்ளாக் பாஸ்கர் ஹிட் கொடுக்கும் படமாக அமையும். அதிலும் காதல் கதை மிகவும் அருமையாக காணப்படுகின்றது. இந்த படத்தில் வரும் பாடல்களும், சண்டைக் காட்சிகளும் தேவி பிரசாத்தின் பின்னணி இசையும் பக்க பலமாக அமைந்து உள்ளது என்றார்.
ஆனாலும் இன்னும் சிலர் முதல் பாதி மிகவும் மெதுவாக சென்றதாகவும் திரைக்கதை சரியாக இல்லை எனவும் இயக்குநரிடம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இந்த படத்தில் பாகிஸ்தானின் காட்சிகள் நன்றாக உள்ளது. ஆனால் இரண்டாவது பாதியில் வரும் சில காட்சிகள் செயற்கையாகவே காணப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளனர்.
Listen News!