மகிழ் திருமேனியின் இயக்கத்தில் முன்னணி நடிகர்களான அஜித் , திரிஷா மற்றும் அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியான நிலையில் தல ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் உள்ளனர்.
இவ்வாறு விடாமுயற்சி படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என அனைவரும் படம் பற்றிய கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றார்கள். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வழங்கிய பேட்டி தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.
அதில் அவர் கூறுகையில், தல படத்தை பார்த்தது மிகவும் சந்தோசகமாக இருந்தது என்றார். மேலும் இந்தப் படம் ஹாலிவூட் ரேஞ்சில் காணப்பட்டதுடன் ரொம்ப நன்றாக இருந்ததாகவும் தெரிவித்தார். இவ்வாறு ஐஸ்வர்யா ராஜேஷ் கதைத்துக் கொண்டிருக்கும் போது இடையில் நடிகை ரெஜினாவும் ஐஸ்வர்யா ராஜேஷுடன் கதைப்பதற்கு கலந்து கொண்டார்.
ரெஜினாவை பார்த்த ஐஸ்வர்யா நீங்கள் விடாமுயற்சி படத்தில ரொம்ப அழகாக நடித்துள்ளீர்கள் என தெரிவித்தார். இறுதியில் இருவரும் விடாமுயற்சி படத்தினை குடும்பத்துடன் போய் பார்க்குமாறு ரசிகர்களுக்கு தெரிவித்திருந்தார்கள். தற்பொழுது இவர்கள் வழங்கிய பேட்டி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.
Listen News!