பிரபல தனியார் ஊடகம் ஒன்றில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் திகழ்ந்து வருபவர் தான் கோபிநாத். இவர் பல பிரபலங்களையும் பேட்டி எடுத்து வருகின்றார். அது மட்டும் இல்லாமல் இவர் தொகுத்து வழங்கும் நீயா? நானா? நிகழ்ச்சியும் மிகவும் பிரபலமாக காணப்படுகிறது.
இந்த நிலையில், கோபிநாத் விஜய் பற்றியும் அஜித் பற்றியும் பேட்டி எடுத்தபோது அவர்கள் இரண்டு பேருமே என்ன பதில் சொன்னார்கள் என தெரிவித்துள்ளார். தற்பொழுது அஜித் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் வெளியான நிலையிலேயே இவர்கள் பற்றிய தகவல்கள் வைரல் ஆகி வருகின்றன.
d_i_a
அந்த வகையில் கோபிநாத் ஒருமுறை அஜித்தை பேட்டி எடுத்தபோது விஜயை பற்றி கேட்டுள்ளார். அதேபோல விஜயைப் பேட்டி எடுத்தபோது அவரிடம் அஜித்தைப் பற்றி கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் கூறிய பதில் தான் ஆச்சரியமாக இருந்தது. ஆனால் நிறைய பேர் இதனை தவிர்ப்பார்கள்.
எனினும் அஜித்தை பேட்டி எடுத்தபோது அவரிடம் விஜையிடம் உங்களுக்கு பிடித்தது என்ன? எனக் கேட்க, அதற்கு அவர் நம்பிக்கை என்று சொன்னார். அதேபோல விஜய் இடமும் அஜித்திடம் உங்களுக்கு பிடித்தது என்ன என்று கேட்க, நம்பிக்கை, விடாமுயற்சி என்று சொன்னார். இவ்வாறு இரண்டு பேருமே ஒரே பதிலை தான் சொன்னார்கள் .
இவர்களுடைய ரசிகர்களும் தனித்தனியாக மோதிக் கொண்டாலும் பொது விஷயத்தில் ஒற்றுமையாக தான் காணப்படுகின்றார்கள். நடிகர்களுக்கு உள்ளே அநாகரிகமாக பேசிக் கொள்வது இல்லை. அஜித்தும் விஜயும் முக்கியமான நடிகர்களாக காணப்படுகின்றார்கள்.
அது மட்டும் இல்லாமல் இவர்கள் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி பிள்ளைகளை கவனித்துக் கொள்வதிலும் சரி அதிக நேரத்தை செலவிடுகின்றார்கள். அத்துடன் இவர்களுக்கும் எமோஷன் அதிகமாகவே காணப்படுகிறது என கோபிநாத் தெரிவித்து உள்ளார்.
Listen News!