• Jan 19 2025

மாமியாருக்கு மரண பயத்தைக் காட்டிய மீனா? விஜயாவுக்கு அதிர்ச்சி கொடுத்த அண்ணாமலை!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. அதன் இன்றைய எபிசோடில் என்ன நடக்குது என பார்ப்போம்..

அதில், வீட்டிற்கு வந்த மனோஜ் விஜயாவிடம் பணம் கேட்டு நச்சரிக்க, அவரும் ஆரம்பத்தில் இல்லை என்றுவிட்டு, பின்பு  கொஞ்சம் பணத்தை எடுத்துக் கொடுத்து சீக்கிரம் வேலைக்கு போ என்று திட்டுகிறார்.

பிறகு முத்து வீட்டுக்கு வந்ததும் அத்தைக்கு நாமளும் ஏதாவது காசு கொடுக்கலாம் என்று மீனா கேட்க,  முத்து ஏன் அம்மா ஏதாவது கேட்டாங்களா என்று வினாவுகின்றார்.

அதற்கு மீனா, இல்ல.. அத்தைக்கு ரோகிணி பாக்கெட் மணி என்று  ஒரு ரூ. 5000 ரூபாய் கொடுத்தாங்க, மாசம் மாசம் அதேபோல தருவன் என்று சொல்லி இருக்காங்க என்று சொல்ல, அதற்கு முத்து, எனக்கு என்னவோ இங்க பொண்ணு மேல சந்தேகமா இருக்கு.. அப்பா சிங்கப்பூர்ல இருக்காரு மலேசியாவில் இருக்கார்னு கதை தான் சொல்லிட்டு இருக்கு.. ஒரு நாள் கூட அவங்க அப்பா வந்து பார்த்தது இல்ல..என சந்தேகம் கொள்ளுகிறார்.

அடுத்ததாக நைட்டு எல்லோரும் தூங்கிய பிறகு விஜயா அவசரமாக பாத்ரூம் செல்ல அவஸ்தப்படுகிறார். முதலில் ரவியின் ரூமை தட்ட அவர்கள் கதவை திறக்காமல் இருக்கின்றனர்.

அதைத் தொடர்ந்து மனோஜ் ரூமை தட்ட அவர்களும் கதவை திறக்காமல் இருக்க விஜய் இப்ப என்ன பண்றது என்ன தவிக்கிறார். பிறகு முத்து ரூம் கதவை தட்ட பாக்க அண்ணாமலை வேணா அவன் இப்பதான் வந்து படுத்திருப்பான் எழுப்ப வேண்டாம் என்று சொல்லி கீழே இருக்கும் பாத்ரூமுக்கு அழைத்துச் சென்று வருகிறார். 

பிறகு முத்து மீனாவுக்கு வெளியில வாடகை வீடு பார்த்து வச்சிடலாம். நீங்க என்ன முடிவு என்று விஜயா கேட்க, அவங்க ஆளுக்கு ஒரு ரூம்ல இருக்காங்க. அவங்க அப்படியே இருக்கட்டும். நாம ஊர்ல அம்மா வீட்டுக்கு போயிடலாம் என்று அண்ணாமலை சொல்ல விஜயா அதிர்ச்சி அடைகிறார்.

அதை தொடர்ந்து பார்வதி வீட்டுக்கு வர, ரோகிணி பாக்கெட் மணி கொடுத்த விஷயத்தை சொல்லி பெருமை கொள்ள, வீடு  நடு தெருவுக்கு வராமல் இருந்தா சரிதான் என்று பார்வதி மனதுக்குள் நினைத்துக் கொள்கிறார். அத்துடன், மீனா, முத்துவை வெளிய போக வைக்கப்போறன் எனவும் சொல்லுகிறார்.

மறுநாள் காலையில், ஒவ்வொருவருக்கும் மீனா தனித்தனியாக சமைத்துக் கொண்டிருக்க, எனக்கு  இட்லி வேண்டாம் தோசை வேண்டும் என ரோகிணி சொல்லுகிறார். அதற்கு, ரெண்டு தோசை சாப்பிட்டு ஆப்பிள் சாப்பிட்டு போம்மா.. ஹெல்தியா இருப்ப என்று விஜயா ஆப்பிளை கட் பண்ண கழுவ செல்கிறார்‌. 

இதன்போது ஸ்ருதி போனில், வாழாவெட்டி சீரியலில் உள்ள மாமியாருக்கு திட்டிவிட்டு, எனக்கு மட்டும் இப்படி ஒரு மாமியார் கிடைச்சிருந்தா வாயிலேயே குத்தி இருப்பேன் என்று சொல்ல விஜயா ஷாக் ஆகிறார்.

பிறகு விஜயா என்னமா மாமியார் பற்றி இப்படி எல்லாம் பேசுற என்று கேட்க, ஒரு ஏழை பெண்ணை அவங்க மாமியார் ரொம்ப கொடுமை பண்ணுறாங்க.. அந்த இடத்துல நான் இருந்தா வாயிலேயே கத்தி விட்டு குத்தி இருப்பேன் என்று சொல்லுகிறார்.

இதையடுத்து, விஜயா மீனாவை கூப்பிட, மீனா கத்தியுடன் வந்து என்ன அத்தை என்று கேட்கிறார். விஜயா அதிர்ச்சி அடைகிறார். இதுதான் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்.

Advertisement

Advertisement