சினிமா ஆசையில் சென்னைக்கு வந்த பல நடிகர்கள், பல இயக்குநர்கள் இருக்கின்றனர்.இதில் ஒரு சிலரே சினிமாவில் வெற்றியும் பெற்றிருக்கின்றனர்.
சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்ற கனவோடு சென்னை வந்தவர்களில் மாரிமுத்துவும் ஒருவர். இவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் படத்தில் உதவி இயக்குநராக இருந்ததோடு, அந்த படத்தில் ஒரு சில காட்சியிலும் நடித்துள்ளார். அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது.
கர்ணன் படத்தைத் தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் நடித்து, தியேட்டரில் வெளியாகி சக்கைப்போடு போட்ட மாமன்னன் படத்திலும் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார்.
இந்நிலையில், உதவி இயக்குநர் மாரிமுத்து தனது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் திருப்புளியங்குடி கிராமத்தில் இருந்த போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.அளவுக்கு அதிகமான புகைப்பழக்கம் தான் மாரிமுத்துவுக்கு மூச்சு திணறல் ஏற்படக் காரணம் எனறு கூறப்படுகின்றது.
சினிமாவில் எப்படியாவது ஜெயித்துவிடவேண்டும் என்ற கனவுடன் இருந்த 30 வயதான மாரிமுத்து இறந்தது திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
Listen News!