• Jan 19 2025

ஜப்பான் ரசிகரின் பாராட்டுக்கு..பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் நகைச்சுவை பதில்!

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் 2023 ஆண்டு வெளியாகி  உலகளவில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. இந்தப் படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.


சமீபத்தில், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஒரு ரசிகர், தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் இசையை வியந்து பாராட்டியுள்ளார். அவரது பதிவு முழுக்க ஜப்பானிய மொழியில் இருந்தது.இந்த பதிவை கவனித்த சந்தோஷ் நாராயணன், தனது வினோதமான நகைச்சுவை முறையில் “ஒண்ணுமே புரியல, இருப்பினும் நன்றி” என பதிலளித்தார்.

இந்த பதில் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி, சந்தோஷ் நாராயணனின் தனித்துவமான நகைச்சுவை உணர்வைப் பாராட்டி ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் இசை உலகம் முழுக்க தனது இடத்தை பிடித்திருக்கிறது என்பதற்கான சான்றாக, ஜப்பானிய ரசிகரின் பாராட்டும், சந்தோஷ் நாராயணனின் நன்றி தெரிவிப்பும் காணப்படுகின்றது.


Advertisement

Advertisement