• Dec 06 2024

கோலிவுட்டில் மாஸாக என்ட்ரி கொடுத்த ஜேசன் சஞ்சய்.! வெளியான அறிவிப்பு

Aathira / 6 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக காணப்படுபவர் தான் விஜய். இவர் நடிப்பில் இறுதியாக கோட் திரைப்படம் வெளியானது. கோட் படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதும் 450 கோடிகளை வாரிக் குவித்தது. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார்.

இதைத்தொடர்ந்து இளைய தளபதி விஜய் தனது 69 ஆவது படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தை எச். வினோத் இயக்குவதோடு இதில் பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக களம் இறங்கி உள்ளார். இந்த படத்துடன் சினிமாவுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அரசியலில் பயணிக்க இருப்பதாக ஏற்கனவே விஜய் அறிவித்திருந்தார்.

d_i_a

இந்த நிலையில், இளையதளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக கோலிவுட்டில் அடி எடுத்து வைத்துள்ளார். அதன்படி தான் இயக்கவுள்ள படம் தொடர்பான முதலாவது ப்ரோமோவை வெளியிட்டு அதிரடி காட்டியுள்ளார்.


பல மாதங்களுக்கு முன்பு லைக்கா நிறுவனத்திடம் தனது முதல் படத்தை தெரிவித்து அவர்களிடம் கையெழுத்து வாங்கினார்  ஜேசன் சஞ்சய். அந்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து பல ஹீரோக்களில் பெயர்கள் இணையத்தில் அடிபட்டன. ஆனாலும் அதிகாரபூர்வமான அறிவிப்பு எதுவுமே வெளியாகவில்லை.

இறுதியில் ராயன் படத்தில் நடித்த சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்க இருக்கின்றார் என்றும், இப்படத்தை தமன் இசையமைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. தற்போது இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தை கவர்ந்து உள்ளதோடு ஜேசன் சஞ்சய்க்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement