மதுரையில் நடைபெற்ற நகைக்கடை திறப்பு விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சி முடிந்தபின் செய்தியாளர்கள், “நடிகர் விஜய் அரசியலுக்கு வருகிறார்… உங்களையும் அழைத்தால் சேர்ந்துவீர்களா?” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “விஜய் அவர்களே அழைத்தாலும் அரசியலுக்கு வருவேன் என்ற எண்ணமே இல்லை. எனக்கு அரசியலில் நாட்டமில்லை” என்று தெளிவாக தெரிவித்தார்.
இதேவேளை அண்மையில் நடிகை அம்பிகா அரசியலுக்கு வருவதாக வெளிப்படையாக தெரிவித்திருந்த நிலையில், அதற்கு மாறாக ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்த இந்த மறுப்பு தற்போது திரையுலகிலும் சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளது.
அவரது நேர்மை மற்றும் தெளிவான நிலைப்பாடு சமூக வலைதள பயனர்களிடையே பாராட்டை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Listen News!