தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய்.
இந்நிலையில் அவர் தற்போது தமிழக வெற்றிக் கழகம் எனும் பெயரில் புதிய கட்சியொன்றை ஆரம்பித்து அரசியலில் படுபிஸியாகவே மாறிவிட்டார்.
இதுஇவ்வாறு இருக்க கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மதுரையில் இடம்பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் 2 ஆவது மாநாட்டில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய், “தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண, இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்திருந்தார்.
இவ்வாறு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் பேசிய விவகாரம் இலங்கையில் பெரும் புயலை வீசிக் கொண்டிருக்கிறது.
இதனால் விஜய்க்கு அரசியல் ரீதியாக மட்டுமில்லாமல் அவரின் படங்கள் வெளியாகும் இலங்கையிலும் எதிர்காலத்தில் விஜயின் படங்கள் தொடர்பில் பிரச்சனை ஏற்படலாம் எனவும் திரையுலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தன்று விஜயின் கடைசி திரைப்படமான ”ஜனநாயகன்” வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் விஜய் இப்படி பேசி இருப்பது அவரின் படத்திற்கு சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மூத்த பத்திரிக்கையாளரும் சினிமா விமர்சகருமான வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
”இலங்கையில் படப்பிடிப்புகள் அதிகமாக நடைபெறுகிறது. அது மட்டும் இல்லாமல் பணக்காரர்கள் விளையாடும் கேம்லிங் ஆட்டமும் அங்கு நடைபெறும். இந்த மாதிரியான தேவைகளுக்காக நம்மூரில் இருந்து இலங்கைக்கு போக்குவரத்து அதிகமாக இருக்கும்”.
ஆனால் விஜய் கட்சத்தீவை மீட்டெடுக்க மீண்டும் என்று பேசியதில் அங்குள்ள சிங்களர்கள் கோபமடைந்து இதற்கு எதிர்ப்புகளை தெரிவிக்கிறார்கள்.
விஜய் உருவப்படத்தை எரிப்பது, அவர் கட்சி கொடியை எரிப்பது என்று ஆக்ரோஷமாக செயல்பட்டதாக இணையத்தில் வந்தது. விசாரித்ததில் அப்படி எதுவும் நடக்கவில்லை என்பது தெரிய வந்தது”.
”இது தொடர்பாக சென்னைக்கு வந்த இலங்கை அமைச்சரிடம் கேள்வி கேட்கப்பட்டது. ’இல்லை கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது தான்’ என்று நெத்தியடியாக அடித்து விட்டார். இது விஜய்க்கு சொல்லப்பட்ட பதிலாக பார்க்கலாம். இந்த பிரச்சனையை மீண்டும் மீண்டும் விஜய் பேசினார் என்றால் இங்கிருந்து படப்பிடிப்புக்கு செல்லக்கூடிய நம்ம ஊரு நடிகர்களுக்கு பிரச்சனை ஏற்படலாம்.
நடக்காத விடயத்தை விஜய் பேசுவதை நிறுத்தினால் அது அவருக்கும் நல்லது, மற்ற எல்லோருக்கும் ரொம்ப நல்லது எனவும் கூறியுள்ளார்.
இவரது இந்த கருத்துக்கு நடிகர் விஜயின் ரசிகர்கள் பலரும் தமது விமர்சன ரீதியான கருத்துக்களை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!