• Jan 07 2026

3 மாதம் வீட்டு வாசலில் காத்திருந்த ரசிகன்! ஷாருக்கான் என்ன செய்தார் தெரியுமா!

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் ஷாருக்கானை யாரும் தெரியாதவர்கள் இருக்க முடியாது. பாலிவுட் ஜாம்பவான் நடிகர் ஷாருக்கான். இவர் நடிப்பில் சமீபத்தில் ஜவான்,பதான் போன்ற திரைப்படங்கள் வெளியாகி வசூலில் சாதனை படைத்தது. இன்றளவும் ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகிறார்கள். 


இந்நிலையில் தற்போது மும்பையில் கடற்கரையையொட்டிய பங்களாவில் வசித்து வருகிறார் ஷாருக்கான். சமீபத்தில் தனது 59வது பிறந்தநாளை ரசிகர்களுடன் சேர்ந்து கொண்டாடினார். ஒவ்வொரு ஆண்டும் பிறந்தநாளன்று தனது வீட்டு பால்கனியில் நின்று ஷாருக்கான் ரசிகர்களைச் சந்திப்பது வழக்கம்.


ஆனால் இந்த ஆண்டு அவ்வாறு சந்திக்கவில்லை. இதனால் ரசிகர்கள் மனஉளைச்சலுக்கு உள்ளாகினர். இந்நிலையில் கிட்டத்தட்ட 3 மாதமாக ஷாருக்கான் வீட்டு வாசலில் காத்திருந்த ரசிகரை சந்தித்துள்ளார்.  ஒவ்வொரு நாளும் ஷாருக்கானை பார்த்துவிடலாம் என்ற நம்பிக்கையிலிருந்தார்.


ஆனால் 3 மாதங்களாக ஷாருக்கானை பார்க்கவே முடியவில்லை. இறுதியாக அந்த ரசிகரை ஷாருக்கான் சந்தித்துப் பேசினார். அந்த ரசிகருடன் சேர்ந்து ஷாருக்கான் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 


Advertisement

Advertisement