தமிழ் சினிமாவில் அதிரடியான நடிப்பு மற்றும் தன்னம்பிக்கையோடு நடிக்கும் வெற்றி நாயகனாக திகழ்பவர் அஜித் குமார். வெறும் திரை நடிப்பில் மட்டும் அல்லாமல், ரேசிங்கிலும் தனது பன்முகத் திறமைகளுடன் மிகுந்த மரியாதையுடன் இருப்பவர்.
இப்போது, அவர் இந்திய சினிமாவைப் பெருமைப்படுத்தும் ஒரு புதிய முயற்சியில் களமிறங்கியுள்ளார். தனது ரேசிங் கார் மீது “இந்திய சினிமா” லோகோவை பொறிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தையும், பெருமையையும் உருவாக்கியுள்ளது.
அஜித் குமார், திரை உலகில் மட்டுமல்லாது, மோட்டார் ரேசிங் உலகிலும் ஒரு அடையாளம் பதித்தவர் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம். Formula 2, Formula Asia ஆகிய பல்வேறு சர்வதேச ரேசிங் போட்டிகளில் இந்தியாவை பிரதிநிதித்துவம் செய்தவர்.
அவரது டிரைவிங் திறனும், கையாளும் தெளிவும் நம் அனைவருக்கும் பரிச்சயமானவை. ஆனால், இது ஒரு புது விதமான முயற்சியாகவே பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் அஜித் தற்பொழுது, "இந்திய சினிமாவை பிரபலப்படுத்தும் வகையில் எனது ரேஸிங் காரில் அதன் லோகோவை பொறிக்கப் போகிறேன். என் ரசிகர்களும் தற்பொழுது மோட்டார் விளையாட்டுகளை ரசிக்க தொடங்கியுள்ளனர். தமிழ் சினிமாவின் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமை அடைகிறேன்." என்று கூறியுள்ளார்.
Listen News!