தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் விஜய் முன்னணி நடிகராக மட்டுமில்லாமல் பல கோடிகளில் சம்பளம் வாங்கும் முதன்மையான நடிகராகவும் காணப்படுகின்றார். தற்போது தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து அதில் பயணித்து வருகின்றார்.
தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக கோட் படம் வெளியானது. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் சினேகா, லைலா, பிரசாத், அஜ்மல், பிரபுதேவா, மோகன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளோடு வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் சுமார் 450 கோடி ரூபாய் வரை வசூலித்தது.
d_i_a
இதைத் தொடர்ந்து தற்போது எச்.வினோத் இயக்கும் தனது 49 ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு சமீபத்தில் தான் ஜனநாயகன் என பெயர் வைக்கப்பட்டது. அதில் நான் ஆணையிட்டால் என்ற கேப்ஷன் போடப்பட்டதால் எம்ஜிஆர் ரசிகர்கள், விஜயின் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் காணப்படுகின்றார்கள்.
இன்னொரு பக்கம் விஜயின் தனிப்பட்ட வாழ்க்கையில் பல கிசு கிசு தகவல்கள் வெளியானது. அவர் தனது குடும்பத்தை பிரிந்து வாழ்ந்ததாகவும் சங்கீதா அவரை டிவோர்ஸ் பண்ணியதாகவும் பல தகவல்கள் வெளியானது.
ஆனாலும் அவருடைய சித்தப்பா சமீபத்தில் அளித்த பேட்டியில், சங்கீதா தனது மகளின் படிப்புக்காக தான் லண்டனில் வசிக்கின்றார் என்றும் அவருடைய மகன் அமெரிக்காவில் உள்ளார் என்றும் விஜய்யை பார்க்க ஆயிரம் பேர் இருக்காங்க ஆனால் அவருடைய பிள்ளைகளை பார்க்க சங்கீதா தானே இருக்க வேண்டும் எனவும் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், சங்கீதாவின் மொத்த சொத்து மதிப்பு பற்றிய விபரம் வெளியாகி உள்ளது. அதன்படி சங்கீதாவுக்கு மொத்தமாகவே 400 கோடி ரூபாய் வரை சொத்து உள்ளதாம்.
அவருடைய அப்பா லண்டனில் உள்ள கோடீஸ்வரர்களுள் ஒருவராக காணப்படுகின்றார். தற்போது விஜய் அரசியலுக்கு நுழைந்துள்ளதால் அவருக்கு வழி விட்டு சற்று விலகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Listen News!