நடிகர் சிம்பு இன்றைய தினம் தனது 42வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார். இதனை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களுக்கான சிறப்பு போஸ்டர்களும் வீடியோக்களும் வெளியாகிக் கொண்டுள்ளன.
இந்த நிலையில், சிம்புவின் ஐம்பதாவது படம் தொடர்பிலான அறிவிப்பும் போஸ்டரும் சற்றுமுன் வெளியாகி உள்ளது. அதில் சிம்புவின் 50 ஆவது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளதாகவும் இதனை சிம்புவே தயாரிக்க உள்ளதாகவும் ஹைலைட் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
d_i_a
அதாவது தனது 50 ஆவது படத்தை ஆத்மன் சினி ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பாக சிம்புவே தயாரிக்க உள்ளார். சரித்திர கதையம்சம் கொண்ட இந்த படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளாராம்.மேலும் இதற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கவுள்ளார்.
சிம்புவின் சினிமா கிரியரில் இந்த படம் ஒரு மைக்கல் ஆக இருக்கும் என்று நம்பப்படுகின்றது. இதற்கான படப்பிடிப்புகள் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும், நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த படம் தொடர்பான அப்டேட் வெளியாகியதால் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றார்கள்.
இவ்வாறு சிம்புவின் ஐம்பதாவது படம் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ளதோடு இது தன்னுடைய கனவு படம் எனக் கூறிய சிம்பு, 'நீங்க இல்லாம நான் இல்லை..' என ரசிகர்களை குறிப்பிட்டு நிகழ்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Listen News!