• Jun 26 2024

இந்த வாரம் குக் வித் கோமாளியில் ஸ்பெஷல் என்ன தெரியுமா? லோகேஷ் பட ரேஞ்சுக்கு வெளியான ப்ரோமோ

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்று தான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் தற்போது ஐந்தாவது சீசன் ஆரம்பமாகி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது.

குக் வித் கோமாளி ஐந்தாவது சீசனில் வெங்கடேஷ் பட் சில காரணங்களால் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி சன் டிவியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சமையல் நிகழ்ச்சியில் நடுவராக சென்றிருந்தார்.

இதனால் வெங்கடேஷ் பட்டுக்கு பதிலாக சமையல் கலையில் பிரபலம் பெற்ற மாதமபட்டி ரங்கராஜ் நடுவராக தாமுவுடன் இணைந்து அசத்தி கொண்டு உள்ளார்.


இறுதியாக நடைபெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியின் மகாராஜா பட குழு கலந்து கொண்டு சிறப்பித்ததுடன், அங்கிருந்த சக போட்டியாளர்களுடன் விஜய் சேதுபதி இணைந்து சமைத்து இருந்தார்.

இந்த நிலையில், தற்போது இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளில் பிரியாணி டாஸ்க் ஸ்பெஷலாக இடம்பெற உள்ளது. அதனை லோகேஷ் கனகராஜின் விக்ரம் பட ஸ்டைலில் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் டிவி.


Advertisement

Advertisement