• Oct 22 2024

தேசிங்கு ராஜா -2 படப்பிடிப்பு தள புகைப்படங்கள் வெளியாகி வைரல் !

Thisnugan / 4 months ago

Advertisement

Listen News!

2013 ஆம் ஆண்டு தமிழில் எழில் இயக்கம் மற்றும் விமல் நடிப்பில் வெளியாகி பெரிதும் பாராட்டப்பட்ட நகைச்சுவை திரைப்படமான  தேசிங்கு ராஜா அன்றைய நாளில் விமலுக்கு ஒரு வெற்றி படமாகவே அமைந்தது.அப் படத்தில் விமலோடு பிந்து மாதவி, சூரி ஆகியோர் முக்கிய கதாப்பாத்தரத்தில் நடித்திருந்தனர்.


இப் படம் வெளியாகி பத்து வருடங்கள் நிறைவடைந்த நிலையில் தேசிங்கு ராஜா இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்புகள் வெளியாகி விமலே கதாநாயகனாக நடிப்பதோடு முதல் பாகத்தின் நடிகர்களே தெரிவு செய்யப்பட்டு படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.


இந்நிலையில் தேசிங்கு ராஜா இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.இப் படம் குறித்து இயக்குனர் எழில் கூறுகையில் இரண்டாம் பாகம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாய் அமையாது என குறிப்பிட்டிருந்தார்.


Advertisement