• Jan 18 2025

நடிகை நஸ்ரியாவின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?- சம்பளம் இத்தனை கோடி வாங்குகின்றாரா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நேரம் என்னும் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் தான் நடிகை நஸ்ரியா. தொடர்ந்து இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது அட்லி இயக்கத்தில் வெளியான ராஜா ராணி திரைப்படம்.காதல் கதையை மையப்படுத்தி வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்தது.

இதனை அடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் மலையாள நடிகர்  பகத் ஃபாசிலை திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகினார். பின்னர் மீண்டும் ரி என்ட்ரி கொடுத்து நடித்து வருகின்றார்.


நஸ்ரியா என்றதுமே அந்த அழகான கண்களும் பல்லை பல்லைக் காட்டி சிரிக்கும் அந்த க்யூட்டான புன்னகையும் கிறுக்குத்தனமான க்யூட்னஸும் தான் ரசிகர்களுக்கு நினைவுக்கு வரும்.நடிகை நஸ்ரியா பகத் ஃபாசில் உடன் வாழ்ந்து வந்தாலும் தனது சினிமா வாழ்க்கையை நிறுத்திக் கொள்ளாமல் நானி உள்ளிட்ட மற்ற நடிகர்களுடன் தொடர்ந்து நடித்து வருகிறார். 

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக புறநானூறு படத்தில் நடிக்க உள்ள நஸ்ரியா ஒரு படத்துக்கு 2 முதல் 4 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாகவும் விளம்பரப் படங்களில் தனி வருமானம் பார்த்து வருவதாகவும் கூறுகின்றனர்.


 29 வயதில் ஒட்டுமொத்தமாக நஸ்ரியாவுக்கு மட்டும் 41 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.மேலும் இன்றைய தினம் பிறந்தநாளைக் கொண்டாடி வரும் இவருக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement