கங்குவா திரைப்படம் இன்றைய நாள் வெளியாகி சூர்யா ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக அமைந்துள்ளது. சுமார் 38 மொழிகளில் 10 ஆயிரம் தியேட்டர்களில் இந்த திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கங்குவா படத்தை அதிகாலையில் பார்த்த ரசிகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை அள்ளித் தெளித்து வருகின்றார்கள். ஆனாலும் நேரம் போக போக கங்குவா படத்திற்கான விமர்சனங்கள் படு மோசமாக எழுந்துள்ளன. இந்த படத்தில் தனது முழு உழைப்பையும் ஒட்டுமொத்தமாக காட்டியுள்ளார் சூர்யா.
கங்குவா படத்தை பார்த்த ரசிகர்கள் முதல் சினிமா விமர்சகர்கள் வரை காலையிலேயே நல்ல பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்திருந்தார்கள். ஆனாலும் கங்குவா படத்தை முழுமையாக பார்க்க முடியவில்லை. சரியான கூச்சலாக இருக்கின்றது. இந்த சத்தத்தை தவிர்ப்பதற்கு லோடு லோடா பஞ்சு கொண்டு போக வேண்டும் என்று ப்ளூ சட்டை மாறன் கலாய்த்து இருந்தார்.
d_i_a
இதை தொடர்ந்து படம் பார்த்து வெளியே வந்த ரசிகர்கள் மூன்று பாகுபலி படத்தை பார்த்தது போல் உள்ளது. அவதார் படத்தை பார்த்தது போல் உள்ளது என்று மிகப்பெரிய அளவுக்கு தமது விமர்சனங்களை கொடுத்திருந்தார்கள். ஆனாலும் ஒரு சிலர் இந்த படத்தில் பெரிதாக சொல்லும் அளவிற்கு ஒன்றும் இல்லை. சூர்யாவின் அடுத்த படத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்து இருந்தார்கள்.
இந்த நிலையில், கங்குவா திரைப்படம் 2000 கோடிகளை வசூலிக்கும் என இதன் தயாரிப்பாளர் நம்பிக்கை வெளியிட்டிருந்தார். ஆனால் தற்போது தமிழகத்தில் இந்த திரைப்படம் 200 கோடியை தாண்டுமா? கோட் படத்தின் வசூலை முறியடிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் ஆயிரம் தியேட்டர்களில் வெளியானது. மல்டிபிளாப் தியேட்டர்களில் எல்லா திரைகளிலும் வெளி விடப்பட்டது. ஆனால் கங்குவா படம் முக்கிய திரையரங்குகளில் இன்னும் எல்லா காட்சிகளும் ஹவுஸ் ஃபுல் ஆகும் நிலைமை கூட இல்லையாம்.
இவ்வாறு கங்குவா திரைப்படத்திற்கு ஒரு ஷோ மட்டும் ஒதுக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதனால் தமிழகத்தில் கங்குவா படத்தின் வசூலில் மிகப்பெரிய இடி விழும் என்று எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!