• Aug 13 2025

அயல் நாட்டிலும் தடம் பதித்த கூலி.. முன்பதிவில் மட்டும் இத்தனை கோடி வசூலா?

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

லோகேஷ் கனகராஜ் - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள 'கூலி' திரைப்படம் நாளைய தினம் உலகளவில் உள்ள திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

'கூலி' திரைப்படம் A சான்றிதழை பெற்றுள்ளது. இதனால் இந்த படத்தில் அதிக  வன்முறை காட்சிகள் இடம் பெற்றுள்ளதோடு அதனை காண பலரும் ஆவலாக உள்ளனர் என்பதும் சமூக ஊடகங்களில் பேசுபொருளாக உள்ளன.

ரஜினியின் படங்களிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய  ஆவலைத் தூண்டும் படமாக கூலி திரைப்படம் அமைந்துள்ளதோடு, இந்த படத்தின் முதல் நாள் வசூலே கோடிக் கணக்கில் கல்லா கட்டும் என கணிப்பிடப்பட்டுள்ளது.


சுமார் 100 நாடுகளில் உள்ள 4,500 தொடக்கம் 5000 திரையரங்குகளில் கூலி திரைப்படம் ரிலீசாக உள்ளதாக தகவல்கள் தெரிவித்திருந்தன. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்படங்களிலேயே அதிக திரையரங்குகளில் ரிலீசாகும் முதல் படம் என்ற சாதனையையும் கூலி திரைப்படம் அடைந்துள்ளது.


இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ரிலீசாக இருக்கும் கூலி திரைப்படம் பற்றிய மற்றும் ஒரு சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கூலி திரைப்படம் இலங்கை முன்பதிவில் மட்டும் சுமார் ரூ. 4.85 கோடி வரையில் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement