• Aug 13 2025

ரங்கராஜ்-ஸ்ருதியுடன் நிகழ்ச்சி...!அடுத்த நாளே கிரிஸ்ல்டாவின் ‘ராஹா’ அப்டேட்...!

Roshika / 1 hour ago

Advertisement

Listen News!

பிரபல சமையல்துறை நிபுணர் மற்றும் நடிகரான மாதம்பட்டி ரங்கராஜ், கடந்த சில நாட்களாகவே தனிப்பட்ட வாழ்க்கை காரணமாக சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி வருகிறார். சமீபத்தில், பேஷன் டிசைனராகும் ஜாய் கிரிஸ்ல்டாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட ரங்கராஜ், திருமணத்திற்குப் பிறகு 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக ஜாய் வெளியிட்ட தகவலும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்நிலையில், ஜாய் கிரிஸ்ல்டா தனது இன்ஸ்டாகிராமில் புது பதிவொன்றை பகிர்ந்துள்ளார். அதில், தனது மகளுக்கு “ராஹா ரங்கராஜ்” என பெயரிட்டதாக தெரிவித்துள்ளார். இப்பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.


அதே சமயம், நேற்று கோவையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் கலந்து கொண்டது இன்னொரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரங்கராஜ் - ஸ்ருதி தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இரு திருமணங்கள், குழந்தையின் பெயர், மற்றும் மனைவிகளுடன் தொடர்புடைய நிகழ்வுகள் என மாதம்பட்டி ரங்கராஜின் குடும்ப வாழ்க்கை தற்பொழுது தமிழ் சினிமா வட்டாரத்திலும் சமூக வலைத்தளங்களிலும் பரபரப்பான விவாதங்களை உருவாக்கியுள்ளது.

Advertisement

Advertisement