• Jan 18 2025

ஹீரோவுக்கு மட்டும் தான் கார் கிடைக்குமா? கூல் சுரேஷூக்கு கார் கொடுத்த பிரியாணி கடை ஓனர்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

ஒரு திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றால் அந்த படத்தின் ஹீரோவுக்கு தயாரிப்பாளர் கார் பரிசு வழங்குவார் என்பதும் சில சமயம் இயக்குனருக்கு கார் பரிசு கிடைக்கும் என்பதையும் பார்த்து வருகிறோம். ஆனால் நடிகரும் பிக் பாஸ் போட்டியாளருமான கூல் சுரேஷ்க்கு பிரியாணி கடை ஓனர் கார் பரிசளித்த நிலையில் இதை அனைவரும் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

சேலம் பகுதியில் மிகவும் பிரபலமாக இருக்கும் பிரியாணி கடை ஒன்றுக்கு சமீபத்தில் கூல் சுரேஷ் சாப்பிட சென்றதாகவும், அப்போது அந்த கடை ஓனரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது தான் ஆட்டோவில் தான் வந்ததாக கூல் சுரேஷ் கூறியதாகவும் தெரிகிறது. இதனை அடுத்து பிரியாணி கடை ஓனர் ’உங்கள் கார் என்ன ஆச்சு’ என்று கேட்க அதற்கு கூல் சுரேஷ் ’சென்னையில் வெள்ளம் வந்த போது தன்னுடைய கார் அடித்து செல்லப்பட்டது’ என்று சோகமாக கூறியுள்ளார்.

இதனை அடுத்து இரண்டு நாட்களுக்கு முன் தனது கடைக்கு வாருங்கள் என்று பிரியாணி கடை ஓனர் அழைத்ததாகவும், பிரியாணி சாப்பிடத் தான் அவர் கூப்பிடுகிறார் என்று நினைத்து கூல் சுரேஷ் சென்றபோது, புத்தம் புதிய காரை அவருக்கு பரிசாக அளித்ததாகவும் கூல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

நாம் என்ன விதைக்கிறோமோ அதுதான் வளரும் என்றும், அன்பை விதைத்தால் ஆலமரம் வளரும், பண்பை விதைத்தால் பலாப்பழம் மரம் வளரும் என்று கூறிய கூல் சுரேஷ் ’அந்த வானத்தை போல மனம் படைத்த மன்னவனே’ என்று பாட்டு பாடி தனக்கு கார் பரிசளித்த பிரியாணி கடை ஓனருக்கு நன்றி தெரிவித்தார். இது குறித்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Advertisement