• Jan 19 2025

ஒரே ஒரு படம் தான் வெற்றி.. நயன்தாரா அளவுக்கு சம்பளத்தை உயர்த்தும் மமிதா பாஜூ.. இத்தனை கோடியா?

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!


நடிகை மமிதா பாஜூ தமிழில் ஜி.வி. பிரகாஷ் நடித்த ‘ரிபெல்’  என்ற படத்தில் நடித்தாலும் அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஆனால் அதே நேரத்தில் அவர் மலையாளத்தில் நடித்த ’பிரேமலு’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும், வெறும் மூன்று கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் தென்னிந்தியாவில் சக்கை போடு போட்டு ரூ.136 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

’பிரேமலு’ படத்தின் வெற்றிக்கு பின்னர் அந்த படத்தின் நாயகனுக்கு ஒரு மலையாள பட வாய்ப்பு மட்டுமே கிடைத்துள்ள நிலையில் மமிதாபாஜுக்கு தமிழ் தெலுங்கில் வாய்ப்புகள் குவிந்து வருகிறது. ஏற்கனவே அவர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் நாயகி நடிக்க ஒப்பந்தமான நிலையில் தற்போது அதர்வா நடிக்கும் படத்திலும் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஆகாஷ் பாஸ்கரன் என்பவர் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்னும் சில படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென அவர் சம்பளத்தை உயர்த்தி விட்டதாகவும், ‘பிரேமலு’  படத்தில் அவர் 25 லட்சம் மட்டுமே சம்பளம் வாங்கிய நிலையில் தற்போது புதிய படங்களில் ஒப்பந்தமாக 5 கோடி ரூபாய் சம்பளம் கேட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒரே ஒரு படத்தின் வெற்றி காரணமாக கிட்டத்தட்ட நயன்தாரா அளவுக்கு அவர் சம்பளம் கேட்டு வருவது தயாரிப்பாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

Advertisement

Advertisement