• Jan 19 2025

முடிவுக்கு வருகிறதா ‘எதிர்நீச்சல்’ சீரியல்? குணசேகரன் அம்மா விசாலாட்சி கொடுத்த அதிர்ச்சி அப்டேட்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ‘எதிர்நீச்சல்’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக குணசேகரன் அம்மா விசாலாட்சி கேரக்டரில் நடிக்கும் நடிகை சத்யபிரியா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளதை அடுத்து பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியல் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது என்பதும் 700 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு என்று ஒரு குறிப்பிட்ட ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஆண்கள் பலர் முதல் முதலாக இந்த சீரியலை பார்க்க ஆரம்பித்ததாகவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் விஜய்யின் அம்மா ஷோபா உள்பட பல பிரபலங்களும் இந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வருவதாகவும் கூறப்பட்டது.



இந்த நிலையில் இந்த சீரியலில் குணசேகரன் கேரக்டரில் நடித்த ஜி மாரிமுத்து இறப்புக்கு பின்னர் கொஞ்சம் டல்லாக சென்று கொண்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில் திடீரென இந்த சீரியல் முடிவுக்கு வர இருப்பதாகவும் சமீபத்தில் இந்த சீரியலில் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

 ஜூலை எட்டாம் தேதி இந்த சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த சீரியலில் விசாலாட்சி கேரக்டரில் நடிக்கும் நடிகை சத்யபிரியா தனது சமூக வலைத்தளத்தில் இந்த சீரியல் முடிய போகிறதா என்ற கேள்விக்கு ’யா’ என்று பதில் அளித்துள்ளார். இது ரசிகர்களை மேலும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

Advertisement

Advertisement