• Jan 19 2025

’குக் வித் கோமாளி’ 5வது சீசனின் அடுத்த 5 குக்குகள்.. மொத்தம் 10 குக்குகள் அறிமுகம்..

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி ஏப்ரல் 27ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்க இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் வீடியோக்கள் அவ்வப்போது விஜய் டிவியின் சமூக வலைதள பக்கத்தில் வெளியாகி வருகிறது என்பதும் அந்த வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் 10 குக்குகள் கலந்து கொள்ள போவதாக செய்திகள் வெளியான நிலையில் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு 5 குக்குகளை அறிமுகம் செய்த வீடியோ வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது அடுத்த ஐந்து குக்குகள் குறித்த வீடியோ வெளியாகி உள்ளதை அடுத்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் 10 குக்குகளையும் முன்கூட்டியே பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்கு சீசன்களிலும் குக்குகள் யார் என்பதை சஸ்பென்சாக வைத்திருந்து நிகழ்ச்சியின் போது தான் வெளியிடுவார்கள் என்ற நிலையில் இந்த சீசனில் மட்டும் மூன்று நாட்களுக்கு முன் கூட்டியே அனைத்து 10 குக்குகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்கள். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் 10 குக்குகள் பெயர்கள் இதோ:

1. இர்பான் - யூடியூபர்

2 . வசந்த் - சீரியல் நடிகர்

3. பிரியங்கா - விஜய் டிவி தொகுப்பாளினி

4. விடிவி கணேஷ் - திரைப்பட நடிகர்

5. சுஜிதா - சீரியல் நடிகை

6. ஷாலினி ஜோயா - நடிகை

7. அக்சய் கமல் - சீரியல் நடிகர்

8. திவ்யா துரைசாமி - நடிகை

9. ஸ்ரீகாந்த் தேவா  - இசையமைப்பாளர்

10. பூஜா - சூப்பர் சிங்கர் பாடகி. 

Advertisement

Advertisement