• Jul 27 2024

இப்படி அசிங்கப்படுத்திட்டீங்களே.. சீரியல் நடிகை சசிலயாவுக்கு குவியும் கண்டனங்கள்.. அதிர்ச்சி வீடியோ..!

Sivalingam / 3 months ago

Advertisement

Listen News!

சீரியல் நடிகை சசிலயா, ஜீன்ஸ் பேண்ட் மற்றும் டி-ஷர்ட் அணிந்து துளசி மாடத்தை கும்பிடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இப்படி அசிங்கப்படுத்திட்டீங்களே என்று கமெண்ட் மூலம் ரசிகர்கள் கண்டனங்களை தெரிவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டிக் டாக் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமான சசிலயா, அந்த பிரபலம் காரணமாக  ’மீனாட்சி பொண்ணுங்க’ என்ற சீரியலில் நடிக்க வாய்ப்பு பெற்றார் என்பதும், அதன் பிறகு ’இதயம்’ உட்பட சில சீரியல்களில், ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே.

 மேலும் கடந்த ஆண்டு வெளியான ’பகாசூரன்’ என்ற படத்திலும் பெண்களை சப்ளை செய்யும் தொழில் செய்பவராக ஒரு கேரக்டரின் சசிலயா நடித்திருந்தார் என்பதும் இவரைத்தான் செல்வராகவன் கொடூரமாக கொலை செய்யும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கயல் ஆனந்தி நடித்த ’ஒயிட் ரோஸ்’ என்ற படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் சசிலயா நடித்துள்ளார்.

இந்த நிலையில் சசிலயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குளித்து முடித்து ஜீன்ஸ் பேண்ட் மற்றும் டி-ஷர்ட் அணிந்து  துளசி மாடத்தின் முன் நின்று சாமி கும்பிடுவது போன்றும் பின்னணியில் சுப்ரபாதம் பாடல் ஒலிப்பது போன்றும் வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு தான் ஏராளமான கண்டனங்கள் குவிந்து வருகிறது.

பக்தி என்றால் உங்களுக்கு அவ்வளவு விளையாட்டு ஆகிவிட்டதா? உங்கள் மேல் எவ்வளவு மரியாதை வைத்திருந்தோம்? இப்படி ஜீன்ஸ் டீ சர்ட் வந்து சாமி பாட்டு சாமி பாட்டை அசிங்கப்படுத்திங்களே’ என்று கமெண்ட்ஸ்கள் பதிவாகிறது. ஆனால் அதே நேரத்தில் சில பாசிட்டிவ் கமெண்ட்ஸ்களும் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement