• Jan 19 2025

24 வருட நட்பு என்றா சும்மாவா..!! எக்ஸ் கணவருக்காக கொந்தளித்த சைந்தவி

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக காணப்படும் ஜிவி. பிரகாஷ் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக  அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார். இதை அடுத்து அவர்கள் இருவர் தொடர்பிலும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இந்த நிலையில், ஜிவி. பிரகாஷின் முன்னாள் மனைவி சைந்தவி, விவாகரத்து பெறுவது நாங்கள். இது நாங்கள் சேர்ந்து எடுத்த முடிவு. ஆதாரம் இல்லாமல் எந்த தவறான கருத்துக்களையும்  பரப்ப வேண்டாம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதன்படி அவர் தெரிவிக்கையில், எங்களுடைய தனிப்பட்ட சுதந்திரத்திற்கு மரியாதை அளிக்கும் படி நாங்கள் கேட்டுக் கொண்ட பிறக்கும் youtube சேனல்கள் பல தவறான கருத்துக்களை பரப்புகின்றன. இது எங்களுக்கு மன வருத்தத்தை தருகிறது. எங்கள் விவாகரத்துக்கு எந்தவிதமான வெளியாட்க்களும் காரணம் இல்லை. ஆதாரம் இல்லாமல் ஒருவர் கேரக்டரை அவமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. 


எங்களின் நலனுக்காக நாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு இது. பள்ளிக்காலத்தில் இருந்தே நானும் ஜிவி பிரகாசும் 24 ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கின்றோம். இனிமேலும் எங்கள் நட்பு தொடரவே செய்யும் என்று கூறியுள்ளார்.


Advertisement

Advertisement