தமிழில் சினிமா மட்டுமின்றி சினிமா என்றாலே திறமையை வைத்து உள்வருபவர்களை விடவும் இயக்குனர்கள் , நடிகர்களின் மகன்கள் , அரசியல் வாதிகள் , கோடீஸ்வரர்கள் ஆகியோர்களே இலகுவாக சினிமாவுக்குள் நுழைகின்றனர்.
அவ்வாறே சமீபத்தில் இயக்குனர் விக்கிரமனின் மகன் விஜய் கனிஷ்கா ஹிட்லிஸ்ட் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக சினிமாவுக்கு அறிமுகமாகின்றார். சூரிய வம்சம் , பூவே உனக்காக , பிரியமான தோழி போன்ற அருமையான திரைப்படங்களை தமிழ் சினிமாவுக்கு வழங்கியவர் விக்கிரமன் ஆவார்.
இவரது மகன் விஜய் கனிஷ்கா ஹீரோவாக அறிமுகமாவதை தொடர்ந்தே இயக்குனர் விக்ரமனுக்கு நெருங்கிய சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த பட்டியலிலேயே தமிழ் நாட்டின் முன்னணி நடிகராக இருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜனிகாந்த் நேரில் அழைத்து அவரை பாராட்டியுள்ளார்.
                             
                            
                            
                                                    
                                                    
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!