தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக காணப்படும் கூல் சுரேஷ், தற்போது கதாநாயகனாகவும் களமிறங்கியுள்ளார். இவர் மஞ்சள் வீரன் என்ற படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்கு கமிட் ஆனார். ஆனாலும் அதன் பின்பு இந்த படம் தொடர்பான அப்டேட்டுகள் எதுவும் வெளியாகவில்லை.
கூல் சுரேஷ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். அந்த சீசனில் அவர் செய்த சேட்டைகள், அட்டூழியங்கள், காமெடிகள் என்பன ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.
இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கூல் சுரேஷ் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யுங்கள் என்று அதிரடியாக பேட்டி கொடுத்துள்ளார். தற்பொழுது அவர் வழங்கிய பேட்டி வைரலாகி வருகின்றது.
குறித்த நிகழ்ச்சியில் கூல் சுரேஷ் கூறுகையில், தமிழகத்தில் சண்டை சச்சரவுகள் இல்லாமல் அமைதியாக போய்க்கொண்டிருக்கிறது. அதனைக் கெடுக்கும் வகையிலேயே பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது. அந்த வீட்டுக்குள் இடம் பெறும் சண்டைகள் சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
தற்போது பிக் பாஸ் வீட்டில் ராணவுக்கு கை உடைக்கப்பட்டுள்ளது. அவனுக்கு கை உடைந்தது போல வேறு எங்கேயும் உடைந்து இருந்தால் அவனால் குழந்தை பெத்துக்க முடியுமா? அவர்களுடைய வீட்டுக்கு யார் பதில் சொல்லுவார் என்று கேள்வியும் எழுப்பி உள்ளார் கூல் சுரேஷ்.
மேலும் தற்போதைய திமுக அரசினால் தமிழகம் எந்தவித சச்சரவுகளும் இன்றி காணப்படுகின்றது. எனவே இதனை சீர்குலைக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று கூல் சுரேஷ் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். தற்பொழுது அவர் இவ்வாறு தெரிவித்த கருத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மேலும் அடுத்த பிக்பாஸ் 9 வரவே கூடாது என கூல் சுரேஷ் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!