• Dec 19 2024

எங்கள் கனவு நாயகன்..! தளபதி விஜயுடன் இருக்கும் திருமண போட்டோஸை பகிர்ந்த கீர்த்தி

Aathira / 4 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் கீர்த்தி சுரேஷ். அதன் பின்பு சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன் படத்தில் நடித்து பட்டித்தொட்டி எங்கும் பேமஸானார். இந்த படங்களின் வெற்றிக்கு பிறகு கீர்த்தி சுரேஷுக்கு முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதன்படி தனுஷ் உடன் தொடரி, விஜய்க்கு ஜோடியாக சர்க்கார் மற்றும் பைரவா, சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், விக்ரம் நடிப்பில் வெளியான சாமி என அடுத்தடுத்து பிரபல நடிகர்களுடன் நடித்து குறுகிய காலத்திற்கு உள்ளேயே பிரபல நடிகையாக உயர்ந்தார்.

தற்போது பாலிவுட்டில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயின் ஆக நடித்த முதல் படம் தான் பேபி ஜான். இந்த படத்தை அட்லி தயாரித்துள்ளார். இதில் வருண் தபால் நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படம் எதிர்வரும் டிசம்பர் 25ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் ரிலீஸுக்கு முன்பே கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொண்டார்.


இந்த நிலையில், கீர்த்தி சுரேஷ் ஆண்டனி தட்டிலை திருமணம் செய்து கொண்ட போது மணமக்கள் வாழ்த்துவதற்காக நடிகரும்,  தமிழக வெற்றிக்  கழகத்தின் தலைவரும் ஆன விஜய் கோவாவுக்கு நேரிலேயே சென்று இருந்தார். இதன் போது எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் எங்கள் கனவு நாயகன் எங்கள் திருமணத்தில் எங்களை ஆசீர்வதித்த போது.. என கேப்ஷன் போட்டு திருமணத்தின்போது விஜய்யுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். தற்போது குறித்த புகைப்படங்கள் இணையத்தை கவர்ந்துள்ளன.

Advertisement

Advertisement