• Nov 22 2024

’மஞ்சுமெல் பாய்ஸ்’ படத்தை விட 10 மடங்கு நல்ல படம் இது.. இதை ஏன் யாரும் கண்டுக்கலை.. இயக்குனர் வருத்தம்..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

மலையாளத் திரைப்படமானமஞ்சுமெல் பாய்ஸ்’  தமிழகத்தில் சக்கை போடு போட்டு வசூலை குவித்து கொண்டிருக்கும் நிலையில் அந்த படத்தை விட 10 மடங்கு நல்ல படமான தனது படம் சரியாக போகவில்லை என்று வருத்தத்துடன்பைரிஎன்ற படத்தின் இயக்குனர் பேட்டி அளித்துள்ளார்.

சமீபத்தில் வெளியானபைரிஎன்ற திரைப்படம் நாகர்கோவில் கதைக்களத்தை கொண்டு புறா பந்தயத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்டிருந்தது. அறிமுக இயக்குனர் ஜான் கிளாடி என்பவர் இயக்கி முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நிலையில் இந்த படத்தில் அனைவருமே புதுமுகங்களாக நடித்திருந்தனர்.

இந்த படத்தின் ரிலீசுக்கு முன்னர் சேரன், பாக்யராஜ், லெனின் பாரதி உள்ளிட்ட சில பிரபலங்கள் இந்த படத்தை பார்த்து இயக்குனரை பாராட்டினர் என்பதும் குறிப்பாக திரைக்கதை மிகவும் அருமையாக இருக்கிறது என்று வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே புதுமுக நடிகர்களாக இருந்தாலும் இந்த படம் கண்டிப்பாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என்றுதான் நம்பிக்கையுடன் இருந்ததாகவும் ஆனால் 120 திரையரங்குகளில் ரிலீசான இந்த படம் இரண்டாவது வாரமே 14 திரையரங்குகளில் மட்டும்தான் ஓடிக் கொண்டிருக்கிறது என்றும் அதற்கு காரணம்மஞ்சுமெல் பாய்ஸ்என்று அவர் தெரிவித்தார்.



மஞ்சுமெல் பாய்ஸ்’  திரைப்படம் நல்ல படம் தான் என்றாலும் அதைவிட பத்து மடங்கு தனது படம் நல்ல படம் என்றும் ஆனால் ரசிகர்கள்மஞ்சுமெல் பாய்ஸ்படத்திற்கு கொடுத்த வரவேற்பை எனது படத்துக்கு கொடுக்காதது வருத்தமாக இருக்கிறது என்றும் குறிப்பாக எனது தயாரிப்பாளருக்கு நான் லாபம் சம்பாதித்து கொடுக்காதது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

பக்கத்து மாநிலத்தில் இருந்து வரும் நல்ல படத்தை பாராட்டுக்கள், அதில் தவறு இல்லை, ஆனால் நம் தமிழிலேயே நல்ல படங்கள் வரும் போது அதற்கும் நீங்கள் ஆதரவு தந்தால் தான் எங்களை போன்ற புதுமுக இயக்குனர்களுக்கு ஊக்கமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை மிக விரைவில் உருவாக்க இருப்பதாகவும் தமிழ் ரசிகர்கள் மேல் தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் கண்டிப்பாக தனக்கு ஆதரவு அளிப்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement